திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (08:51 IST)

கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவற்றைப் பார்ப்பதில்லை… நவாசுதீன் சித்திக் பரபரப்பு கருத்து!

சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் வட இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களில் சக்கை போடு போடுகின்றன.

தென்னிந்தியாவில் இருந்து உருவான RRR, புஷ்பா மற்றும் கேஜிஎஃப் போன்ற படங்கள் வட இந்தியாவில் வசூல் வேட்டை நடத்துகின்றன. இந்த படங்களின் ரிலீஸால் இந்தி படங்களே தங்கள் ரிலீஸை தள்ளி வைத்துக் கொள்கின்றன. இந்நிலையில் பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் பேன் இந்தியா படங்கள் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் ”நான் நிறைய கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், இதுபோன்ற கமர்ஷியல் படங்களைப் பார்ப்பதில்லை. அதனால் அந்த படங்களின் வெற்றிக் குறித்து என்னால் கருத்து சொல்ல முடியவில்லை. ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து வரும் படங்கள் வெற்றிப்படத்தை அடியொற்றியே வரும்.  பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன வழங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.