வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (08:44 IST)

பிரபலமான நடிகரா இருந்தாலும்.. அவங்களுக்கு சாதிதான் எல்லாமே! – பேட்ட வில்லன் நடிகர் வேதனை!

தான் பிரபலமான நடிகராக இருந்தும் தன் மீது இன்னும் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக நடிகர் நவாசுதின் சித்திக் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகராக உள்ளவர் நவாஸுதீன் சித்திக். “கேங்க்ஸ் ஆஃப் வஸேப்பூர்”, “பஜ்ரங்கி பைஜான்” என பல பிரபலமான படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். தற்போது இவர் நடித்துள்ள ”சீரியஸ் மேன்” என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தந்தை கதாப்பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் “சாதிய பாகுபாடு இன்னமும் சமூகத்தில் நிலவி வருகிறது. எனது பாட்டியை அவரது கிராமத்தில் இன்னமும் சாதிய பாகுபாடு காட்டி ஒதுக்கி வருகிறார்கள். நகரத்தில் உள்ளது போல கிராமங்களில் சோசியல் மீடியா பயன்பாடு, தாக்கம் அதிகம் கிடையாது. நகரங்களில் வேண்டுமானால் சாதி இரண்டாம் பட்சமாக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் முதலாவது சாதிதான்” என்று கூறியுள்ளார்.