“என்ன மாதிரி கமல் ரசிகர்களுக்கு… அன்லிமிடெட் அசைவ விருந்து”… ‘விக்ரம்’ பற்றிய பிரபல இயக்குனர்!
விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானா மற்றும் அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் வேட்டை நடத்தி வருகிறது விக்ரம். தமிழ்நாட்டில் துல்லியமான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் படத்தைப் பார்த்துள்ள மூடர்கூடம் இயக்குனர் நவீன் “என்னைப் போன்ற கமல்ரசிகர்களுக்கு இயக்குனர் லோகேஷ் அன்லிமிடெட் அசைவ விருந்து படைத்துள்ளார்.” எனப் பாராட்டி டிவீட் செய்துள்ளார்.