1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (17:31 IST)

விஜய் சேதுபதி, டி,இமான், கங்கனாவுக்கு தேசிய விருது..

2019ஆண்டு சினிமாவுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
.
2019ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதுஅசுரன் படத்திற்கும் இதில் நடித்த  தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

அதேபோல் இப்படத்தில் நடித்த தனுஷிற்கு 2 வது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது. ஆடுகளம் படத்திற்கு பிறகு இந்த விருதை தனுஷ் பெற்றார்.


சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதி சிறந்த துணைநடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வாசம் படத்தில் பாடலுக்காக டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேடி என்ற கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மணிகர்ணிகாவில் நடித்த நடிகை கங்கணா ரணாவத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.