1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (10:52 IST)

நடிகர் அஜித்துடன் பிறந்தநாளைக் கொண்டாடிய நடராஜன்! வைரல் போட்டோஸ்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன் டிஎன்பிஎல் போட்டிகள் மூலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி, அதில் பிரகாசித்து பின்னர் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதற்கு அவரின் காயமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இப்போது மீண்டு வந்துள்ளார். தற்போது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நடராஜன் தன்னுடைய பிறந்தநாளை நடிகர் அஜித்குமாரோடு இணைந்து கொண்டாடியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது பைக் டூரில் இருக்கும் அஜித்தும், ஐபிஎல் தொடரில் பிஸியாக இருக்கும் நடராஜனும் எப்போது எங்கே சந்தித்து இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.