வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 31 மே 2023 (07:33 IST)

விஜய்யின் லியோ படத்தில் நடிக்கும் பிரபல நடிகரின் தம்பி!

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

இப்போது சென்னை ஆதித்யராம் ஸ்டுடியோவில் தற்போது நடந்து வருகிறது. இதில் விஜய்யும் அர்ஜுனும் இளமையான தோற்றத்தில் மோதிக் கொள்ளும் ஆக்‌ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறாராம். கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக இந்த சண்டைக் காட்சிகளைதான் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்ந்லையில் இந்த படத்தில் பிரபல நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள அவர் “காஷ்மீரில் 40 நாட்கள் படக்குழுவோடு தங்கி இருந்தேன். எனது காட்சிகள் 15 நாட்கள் படமாக்கப்பட்டன” எனக் கூறியுள்ளார். ஆனால் படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற விவரம் தெரியவரவில்லை.