வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2023 (23:16 IST)

நானியின் ''தசரா'' பட 2 வது சிங்கில் ரிலீஸ்

நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள தசரா திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி. இவர்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தசரா.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில்,  சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வெளியானது.

இப்படத்தின் முதல் சிங்கில் ஓரி வாரி கடந்த 13 ஆம் தேதி  வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று இதன் தமிழ் பாடலான தீக்காரி வெளியாகி வைரலாகி வருகிறது.