வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2024 (13:43 IST)

நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும் புதிய படத்தின் தொடக்க விழா!

நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு - தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா + கோபி அச்சந்தா - 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் - எம். தேஜஸ்வினி நந்தமூரி ஆகியோர் கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் திரைப்படத்தின் தொடக்க விழா வரும் 16 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
 
நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு இந்தக் கூட்டணி ..‌இந்திய சினிமாவின் அற்புதமான கூட்டணிகளில் ஒன்று. இந்த டைனமிக் கூட்டணி - ஏற்கனவே 'சிம்ஹா', ' லெஜண்ட்', 'அகண்டா' என மூன்று பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படைப்புகளை வழங்கி உள்ளது. இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்புகளை கடந்து பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனையை படைத்தது. 
 
இந்நிலையில் பாலகிருஷ்ணா - பொயப்பட்டி ஸ்ரீனு இருவரும் நான்காவது முறையாக '# BB4 ' எனும் படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு நந்தமூரி பாலகிருஷ்ணா பிறந்த நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த திரைப்படத்தை 'லெஜண்ட்'  படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களான ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர், 14 ரீல்ஸ் பிளஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். 
 
நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த தருணத்தில் எதிர்வரும் பதினாறாம் தேதி இப்படத்திற்கான பிரம்மாண்டமான  தொடக்க விழாவில்  வெளியீட்டிற்கான அறிவிப்பினை தயாரிப்பாளர்கள் வெளியிடுகிறார்கள். அங்கு இந்த திரைப்படத்தைப் பற்றிய கூடுதல்  விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
 
#BB4 திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ளது. நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் இதுவரை அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக இந்தப் படம் அமைய உள்ளது.