வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:12 IST)

பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய நமீதா சென்ற இடம் எது தெரியுமா?

பிக்பாஸ் போட்டியாளர்கள் 15 பேரில் ஒருவர் நடிகை நமீதா. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் நடிகை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னரே இவர் வெளியேற்றப்பட்டார்.
 

 
 
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் பிக்பாஸ் குறித்து தன்னுடைய கருத்தை கூறி வந்தார். அதில் பிக்பாஸ் வீட்டில் 24  மணி நேரம் நடப்பதை ஒரு மணி நேரத்தில் சுருக்கி எடிட் செய்து காண்பிப்பதால் முழு உண்மையும் பார்வையாளரை போய் சேரவில்லை என்றும் பாதி உண்மைதான் செல்வதாகவும் அவர் கூறினார்.

 
இந்நிலையில் நடிகை நமீதா தற்போது இமாசல பிரதேசம் சென்று அங்கு தன் நாட்களை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.