1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2017 (12:33 IST)

குத்துச்சண்டை கற்ற நமீதா

‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் போல, நடிகை நமிதாவும் குத்துச்சண்டை கற்றுள்ளார்.


 
 
‘மச்சான்ஸ்…’ என்று நமிதா அழைக்கும் அழகிலேயே மொத்த தமிழக இளைஞர்களும் சொக்கிக் கிடக்கிறார்கள். அந்த அழகை தூரத்தில் இருந்து ரசித்தால் நல்லது. கிட்டே போனால்தான் ஆபத்து. ஆம், குத்துச்சண்டை கற்றவராம் நமிதா.

‘இறுதிச்சுற்று’ படத்தில், நாயகிக்கு குத்துச்சண்டை தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக, நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங்கையே நாயகியாக்கினார் இயக்குநர் சுதா கொங்கரா.

ஆனால், படத்துக்காக நமிதா குத்துச்சண்டை கற்றுக் கொள்ளவில்லையாம். தற்காப்புக்கலையாக அதைக் கற்று வைத்திருக்கிறாராம். இதுவரை எந்த குத்துச்சண்டைப் போட்டிகளிலும் கலந்து கொள்ளாத நமிதாவுக்கு, அதை டிவியில் பார்த்து ரசிப்பதோடு, புது டெக்னிக்குகளையும் அப்டேட் செய்து கொள்வாராம்.

இனி நமிதா கிட்ட பார்த்து நடந்துக்கோங்க…