1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (21:13 IST)

4 வருஷமா காதலா? வருங்கால கணவருடன் பழைய நினைவுகளை பகிர்ந்த நக்ஷத்திரா!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் நக்ஷத்திரா. பல சீரியல்களில் நடித்துள்ள இவர் குறும்படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். இந்நிலையில் தற்ப்போது சரஸ்வதியும் தமிழும் என்கிற சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 
 
நக்ஷத்திராவுக்கு காதலன் ராகவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது. திருமணத்திற்காக காத்திருக்கும் அம்மணி அவ்வவ்போது fiancee உடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார். இந்நிலையில் ராகவ் உடனான காதல் பயணம் குறித்த சில அழகிய புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளார். 
 
அதில் 2018 ஆண்டில் இருந்தே இருவரும் காதலித்து அவுட்டிங் சென்றுள்ளனர். மூச்சு கூட விடாமல் இந்த ரகசியத்தை பாதுகாத்து வந்த நக்ஷத்திரா திருமண நிச்சயதார்த்தம் ஆன பின்பு இதை தெரிவித்திருப்பது ஆர்ச்சர்யப்படுத்தியுள்ளது.