சீன் பார்ட்டி, அடாவடி... பிரபல நடிகையின் மீது நடிகர் புகார்...
பிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி அந்த படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனையடுத்து இவருக்கு பட வாய்ப்பு குவியத் துவங்கியது.
தற்போது தமிழில் கரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் நாக சவுர்யா என்ற தெலுங்கு நடிகர் ஹிரோவாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் சாய் பல்லவி மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். கரு படப்பிடிப்பின் போது சாய் பல்லவி செட்டில் ஓவர் பந்தா காட்டியதாகவும், தேவையில்லாத விஷயங்களில் கூட அடாவடியாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஃபிடா படம் ஹிட்டாகி சாய் பல்லவிக்கு பெயர் வாங்கி தந்தது. ஆனால், அந்தப்படத்தின் வெற்றிக்கு அவர் மட்டுமே காரணம் என்பதுபோல நடந்துகொள்வதாகவும் குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார்.
இதர்கு முன்னர் சாய் பல்லவி நடித்த மிடில் கிளாஸ் அப்பாயி தெலுங்கு படத்தின் படப்பிடிப்பிலும் இப்படி நடந்துகொண்டதால் படத்தின் ஹீரோ நானி கோபத்தில் செட்டை விட்டு வெளியே கிளம்பினார் என செய்திகல் வெளியானது குறிப்பிடத்தக்கது.