1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

முதல்வருக்கு நடிகர் சங்கம் வைத்துள்ள அடுக்கடுக்கான கோரிக்கைகள்!

முதல்வருக்கு நடிகர் சங்கம் வைத்துள்ள அடுக்கடுக்கான கோரிக்கைகள்!
நடிகர் சங்க அறக்கட்டளையை சேர்ந்த உறுப்பினர்கள் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களை சந்தித்து அடுக்கடுக்கான கோரிக்கைகளை வைத்து உள்ளனர் 
 
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினரான பூச்சி முருகன் அவர்கள் செய்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனு ஒன்றை அளித்துள்ளார். நடிகர் சங்கம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் நடிகர் சங்கத் கோரிக்கை வைத்துள்ளது
 
மேலும் கொரோனா காரணமாக நலிவுற்று இருக்கும் நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு அரசு உதவிட வேண்டும் என்றும் அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நலிவுற்ற நடிகர்களுக்கு பயன்பெறும் வகையில் இலவசமாக ஆறுமாதம் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் நலிவுற்ற நடிகர்களின் வாரிசுகள் கல்வி கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நடிகர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சையில் நடிகர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது 
 
இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்