Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2022 (19:12 IST)
நூறு கோடி மனுசனுக்கு ஆயிரம் கோடி ஆசை: ‘நான் மிருகமாய் மாற’ டிரைலர்
நூறு கோடி மனுசனுக்கு ஆயிரம் கோடி ஆசை: நான் மிருகமாய் மாற டிரைலர்
100 கோடி மனசு எனக்கு ஆயிரம் கோடி ஆசை என்ற வசனத்துடன் கூடிய சசிகுமார் நடித்த நான் மிருகமாய் மாற என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சசிகுமார், ஹரிப்பிரியா, விக்ராந்த் நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நான் மிருகமாய் மாற. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரில் உள்ள அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படம் நவம்பரில் ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது