1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 13 நவம்பர் 2022 (08:44 IST)

டிசம்பரில் திரையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்… லேட்டஸ்ட் அப்டேட்!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. இந்த பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாம்.

இதையடுத்து நவம்பரிலேயே இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் இப்போது டிசம்பர் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் இறுதிப் பணிகள் முடிந்து படம் 2மணிநேரம் 20 நிமிடம் ஓடும் விதமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சென்சார் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.