வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2017 (13:10 IST)

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பாலா – ஜோதிகா படம்

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துவரும் ‘நாச்சியார்’ படம், இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
 


 

பாலா இயக்கத்தில் ஜோதிகா முக்கிய வேடமேற்று நடித்துவரும் படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் ரவுடியாகவும், தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் வில்லனாகவும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். பாலாவே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்த வருடம் தொடங்கிய படப்பிடிப்பு, கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டதாம்.

சில நாட்களுக்கு முன்பு இறுதி ஷெட்யூலும் தொடங்கிவிட்டதாக, ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாலா இயக்கத்தில் ஒரு படம் ஆரம்பிக்கப்பட்டு, அந்த வருடமே ரிலீஸ் ஆவது என்பது சாதனை தான். இந்தப் படத்தை, ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர்.