மூன்றே நாளில் திருப்பி அனுப்பப்பட்ட த்ரிஷா.. ப்ரியா ஆனந்த் தான் மெயின் ஹீரோயினியா?
விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். இந்த நிலையில் படபிடிப்பு தொடங்கி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் த்ரிஷா சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதனை அடுத்து த்ரிஷாவின் கேரக்டரை லோகேஷ் கனகராஜ் கொன்றுவிட்டாரா? த்ரிஷாவுக்கு சின்ன கேரக்டர் தானா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் த்ரிஷாவுடன் சென்ற பிரியா ஆனந்த் இன்னும் காஷ்மீரில் தான் இருக்கிறார் என்பதால் அவருடைய கேரக்டர் தான் அதிகம் என்றும் அவர்தான் இந்த படத்தின் உண்மையான நாயகி என்றும் கூறப்பட்டு வருகிறது
14 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் த்ரிஷா நடிக்க இருக்கிறார் என்பதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் த்ரிஷாவுக்கு இந்த படத்தில் மிகச் சிறிய கேரக்டர் தான் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளதால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
Edited by Siva