செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (07:40 IST)

மீண்டும் தொடங்கிய விஜய் சேதுபதியின் டிரெய்ன் பட ஷூட்டிங்!

பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கியது.

ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை கனிகா நடிக்க உள்ளார். இது சம்மந்தமாக மிஷ்கினுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி விடுதலை படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக ரோட்டர்டாம் சென்றிருந்த நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது அவர் சென்னை திரும்பியுள்ளதால் மீண்டும் டிரெய்ன் பட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு வாரம் நடக்கும் நிலையில் அதன் பின்னர் மீண்டும் விடுதலை 2 ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளாராம்.