ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (14:27 IST)

மிஷ்கின் ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லன் இவர்தான்!

பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கியது.

ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை கனிகா நடிக்க உள்ளார். இது சம்மந்தமாக மிஷ்கினுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்திருந்தார்.

இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பானக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த படத்தில் வில்லனாக நாசர் நடிப்பது உறுதியாகியுள்ளது. தற்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை விறுவிறுப்பாக ஷூட் செய்து வருகிறாராம். அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால் அவர் சம்மந்தமானக் காட்சிகளை படமாக்கி முடிக்க உள்ளாராம்.