செவ்வாய், 11 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (11:43 IST)

ட்ரெய்ன் படத்தின் பிஸ்னஸ்ஸை எக்கச்சக்கமாக எகிற வைத்தாரா மிஷ்கின்? தாணு அப்செட்!

பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கியது.

சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் மிஷ்கின். இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார். மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விறுவிறுப்பாக நடந்த இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. தொடங்கும் போது 24 கோடியில் தொடங்கிய படம் முடிக்கும் போது 39 கோடி ரூபாய் ஆகும் அளவுக்கு இழுத்துவிட்டாராம் மிஷ்கின். இந்த படத்தின் எந்த பிஸ்னஸும் தற்போது வரை விற்கவில்லையாம். இதனால் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.