திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (09:36 IST)

விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்: மிஷ்கின் அதிர்ச்சி தகவல்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கி வந்த துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாகவும், இந்த படம் குறித்து விஷால்-மிஷ்கின்  இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் துப்பறிவாளன்2’டு படத்தை முடிக்க விஷாலிடம் மிஷ்கின் ரூபாய் 40 கோடி கேட்டதாகவும் இதனால் தான் இருவருக்கும் பிரச்சினை என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மிஷ்கின் ’நான் விஷாலிடம் 40 கோடி கேட்கவில்லை, 400 கோடி கேட்டேன். இந்த படத்தின் பட்ஜெட் மொத்தம் 500 கோடி. கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் 100 கோடி செலவாகும் என்று கிண்டலாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் இந்த படத்தை விஷாலே இயக்கவிருப்பது குறித்த தகவலை விஷால் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஷால் ‘சக்ரா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் விஷால், ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.