1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (09:58 IST)

ஆண்ட்ரியாவுக்கு இன்று ஸ்பெஷல் தினம்: வாழ்த்து கூறிய மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா முக்கிய இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கும் ’பிசாசு 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆண்ட்ரியாவின் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அவர் தனது பட நாயகி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் 
 
‘இன்று ஆண்ட்ரியாவுக்கு ஒரு ஸ்பெஷல் தினம் என்றும் என்னுடைய ’பிசாசு 2’ திரைப்படத்தின் நாயகியான அவர் நீண்ட நாள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என்றும் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ’பிசாசு 2’ படத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த போஸ்டரில் அட்டகாசமான லுக்கில் ஆண்ட்ரியா இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மிஸ்கின் இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையில் ராக்போர்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’பிசாசு 2’ படத்தில் மிஷ்கினும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் விரைவில் தொடங்க உள்ளது