ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (09:55 IST)

என் நம்பிக்கை வீண்போகவில்லை! வாட்ச்மேன் படக்குழுவைப் புகழும் நடிகை

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் படம் வாட்ச்மேன். இப்படத்திற்கு நீரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.


எடிட்டிங் விஜயன். இதில், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நாய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. அதேபோல், நடிகை சம்யுக்தா நடிக்கும் மற்றொரு படத்தின் பெயர் பப்பி. அந்தப் படத்திலும் நாய் ஒரு முக்கிய கதாபாத்திரமாகியிருக்கிறது. 
 
படத்தில் ஜி.வி.பிரகாஷ் மிகவும் சப்போர்டிவ்வாக இருந்ததாகச் சொல்கிறார் நடிகை சம்யுக்தா. இதுகுறித்து பேசிய சம்யுக்தா ஹெக்டே, பெண் கதாபாத்திரங்களை மிகவும் பவர்புல்லாக வடிவமைப்பதில் இயக்குனர் விஜய் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். வாட்ச்மேன் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, அந்தப் படம் எந்த ஜானரைச் சேர்ந்ததாக இருக்கும் என எனக்குத் தெரியாது. அதைப் பற்றி நான் கவலைப்படவே இல்லை. இந்தப் படத்தில் நடிப்பதன்மூலம் அடுத்தகட்டத்துக்கு என்னை அப்கிரேட் செய்துகொள்ள முடியும் என்பதில் நான் நம்பிக்கையாக இருந்தேன். படத்தின் ஷூட்டிங் முடிந்தபோது எனது நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை அறிந்தேன். ஜி.வி.பிரகாஷ் மிகவும் சப்போர்ட்டிவாக இருந்தார்’ என்று பாராட்டியிருக்கிறார்.