வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மே 2024 (13:31 IST)

28 வயதில் காலமான தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்.. திரையுலகினர் அஞ்சலி..!

28 வயதான தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திடீரென காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

மேதகு , ராக்கதன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன் குமார். இவர் சில குறும்படங்களுக்கும் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மேதகு திரைப்படத்தில் இடம்பெற்ற ’தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரவீன் குமார் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலமானார். அவரது இறுதி ஊர்வலம் இன்று தஞ்சையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இசையமைப்பாளர் பிரவீன் குமார் சில படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருந்த  நிலையில் அவர் வளர்ந்து வரும் வேளையில் திடீரென காலமாகி இருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran