1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (18:11 IST)

தயாரிப்பாளர்களுக்கு ‘அல்வா’ கொடுக்கும் இசை நடிகர்

ஒரு படம் ஓடினால் போதும். ‘ஜெயிக்குற குதிரையில தான் பணத்தைக் கட்டுவாங்க’ என்று பஞ்சாங்கம் பேசி ஒட்டுமொத்த ஊரும் ஒரே குதிரையில் பணத்தைக் கட்டுவது போல, அந்த நடிகர் அல்லது நடிகைக்கு எக்கச்சக்க வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும். அவர்களும், ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளலாம்’ என்பதற்காக வந்த லட்சுமியை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.


 

 
அப்படித்தான் கதையைப் பற்றி கவலைப்படாமல் வருகிறவர்களையும் வளைத்துப் போட்டார், பிரகாசமான இசையமைப்பாளர் கம் நடிகர். அவர் நடித்த முதலிரண்டு படங்கள் நன்றாகப் போனது. ஆனால், அதற்குப் பிறகு வரிசையாக தோல்வியடைய, அட்வான்ஸ் கொடுத்தவர்கள் மெள்ளவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள்.
 
அட்வான்ஸை திருப்பிக் கேட்டால், ‘கால்ஷீட் தான் இருக்கு… காசு இல்லை’ என்ற பதில் தான் வருகிறதாம். இதனால், ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்ற கதையாக, அட்வான்ஸோடு போகட்டும் என்று விட்டுவிடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.