வெள்ளி, 23 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (07:16 IST)

சிவகார்த்திகேயன் முருகதாஸ் இணையும் படம் தொடங்குவது எப்போது?

தர்பார் படத்தின் தோல்வியால் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வருகிறார். இடையில் அவர் அக்‌ஷய் குமார் மற்றும் ஒரு குரங்கை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

இதனால் மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஸ்பைடர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மோகன்லால் நடிக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமாலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குள் சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் ராஜ்குமார் பெரியசாமியின் படத்தை முடித்துவிடுவார் என சொல்லப்படுகிறது.