புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (23:39 IST)

ஓடிடியில் படம் ரிலீஸ்...தியேட்டர் உரிமையாளர்கள் முக்கிய தகவல்

ஓடிடியில் திரைப்படம் வெளியாவது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸாகியிருக்க வேண்டிய மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி பெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தின் வசூல் உலகளவில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. ரூ.200 கோடி கிளப்பில் விஜய்யின் மாஸ்டர் இணைந்துள்ளது.

இந்நிலையில், மற்ற ஹீரோக்களும் விஜய்யைப் பின்பற்றி தங்களின் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர்.

நீண்ட காலத்திற்குப் பிறகு மாஸ்டர் படம் ரிலீஸானாலும் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் மொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. அத்துடன் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வருமானம் கொடுத்துள்ளதுடன், தியேட்டர் பணியாளர்களுக்கு இப்படம் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. இதனால் பலரும் விஜய்க்கு நன்றி கூறிவருகின்றனர்.

மேலும் , இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் அனைவரும் பார்ப்பதற்காக மாஸ்டர் படம் ஒடிடியில் ரிலீஸாகவுள்ளதாக விஜய் கூறியிருக்கி்றார்.

இந்நிலையில் , தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது திரைப்படங்கள் ஒடிடியில் வெளியிடுவது குறித்து கூறியுள்ளதாவது:

பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்கில் ரிலீஸாகி சுமார் 50 நாட்கள் கழித்தும், சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸாகை சுமார் 30 நாட்கள் கழித்தும் இப்படங்கள் ஹாட்ஸ்டார், அமேசான் வீடியோ பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஒடிடிதளங்களில் ரிலீஸ் செய்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். இதனால் சினிமாத்துரைக்கும் திரையரங்கிற்கும் இடையே உள்ள கருத்துவேறுபாடு களையும் எனத் தெரிகிறது.