அம்மா, மகனாக ஷோபா, விஜய்...?
அம்மா, மகனாக ஷோபா, விஜய்...?
மகன் விஜய் படத்தில் அம்மா ஷோபா சந்திரசேகரன் பின்னணி பாடல் பாடியிருக்கிறார். அம்மாவும் மகனும் இணைந்தே சில பாடல்கள் பாடியுள்ளனர்.
தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா அதில் ஒன்று. ஷோபா சந்திரசேகரன் இதுவரை படங்களில் நடித்ததில்லை. ஆனால், ஒரு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரியப்படுத்தியிருந்தார். அம்மாவின் மனதில் இப்படியொரு ஆசை இருப்பது விஜய்க்கே ஆச்சரியமாம்.
ஆசைப்பட்டது இளைய தளபதியின் அம்மா. நடக்காமல் போகுமா? விரைவில் ஒரு படத்தில் விஜய்யின் அம்மாவாகவே ஷோபா சந்திரசேகரன் நடிப்பார் என்கிறார்கள்.