1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (18:13 IST)

’வாலை சுருட்டு’: ருத்ரதாண்டவம் படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

மோகன் இயக்கத்தில் ரிசார்ட்ஸ் நடித்த ருத்ரதாண்டவம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஆனா ’வாலை சுருட்டு’என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ளது 
 
திரெளபதி என்ற திரைப்படத்தின் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் மோகன்ஜி. இவருடைய அடுத்த படமான ருத்ர தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் ’வாலை சுருட்டு’என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஜூபின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை ஜூபின் மற்றும் மோகன் எழுதியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ரிச்சர்ட்ஸ், தர்ஷா குப்தா, கெளதம் மேனன், ராதாரவி, தம்பிராமையா, மாளவிகா, அவினாஷ், மாரிமுத்து, ஒய்ஜி மகேந்திரன், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் திரௌபதி படம் போலவே வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது