1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:29 IST)

சண்டை போடும் சித்தார்த்; பார்த்து சிரிக்கும் மோகன் ஜி! – அல்லோலப்படும் ட்விட்டர்!

ட்விட்டரை டாய்லெட் போல் ஆக்கியது யார் என்பது குறித்த விவாதம் நடிகர் சித்தார்த் மற்றும் நெட்டிசன்கள் இடையே நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய திமுக முதல்வரை என்ன செய்யப்போகிறீர்கள் சித்தார்த் என நெட்டிசன் ஒரு கேள்வி கேட்டார்

அதற்கு சித்தார்த் மிகவும் கோபமாக, ‘’மூதேவி கோவமோ, சந்தேகமோ வந்தா துப்பு இருந்தா போய் நீ கேளு, இல்ல உங்க அப்பனை போய் கேளு. நான் என் வேலைய தான் பாத்துட்டு இருக்குறேன். பொறுக்கி பசங்க இதுவே வேலையா போச்சு, டுவிட்டரை டாய்லெட் ஆக்கி வச்சிருக்கீங்க.வேற எங்க மலரும்? சாக்கடையில் தான் மலரும், என பதிலளித்தார்

இதனால் சித்தார்தின் ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் பலரும் அநாகரிகமான வார்த்தைகளில் சித்தார்த் பேசுவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சித்தார்த்தின் பதிவை ரீட்வீட் செய்துள்ள இயக்குனர் மோகன் ஜி “நான் என் வேலையதாண்ட செய்றேன்” என பதிவிட்டு சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார்.