தனுஷ் 50 படத்தின் திரைக்கதைப் பணியில் இணைந்த பிரபல இயக்குனர்
இயக்குனர் தனுஷ் தன்னுடைய 50 ஆவது படத்தைத் தானே இயக்கி நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவின் திறமைமிகு நடிகர்களில் ஒருவரான தனுஷ், பவர் பாண்டி மூலம் இயக்குநராகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார். இதை அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் இப்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் திரைக்கதை பணியில் திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் பணியாற்றி வருகிறாராம்.