தர்பார்’ நஷ்டமா? என்கிட்ட வாங்க: பஞ்சாயத்து செய்ய முன்வரும் தமிழக அமைச்சர்
‘தர்பார்’ திரைப்படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் தமிழக அரசை அணுகினால் அவர்களுக்கு தமிழக அரசு உரிய முறையில் உதவும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் நஷ்டம் ஏற்பட்டதாக ‘தர்பார்’ திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர் அவர்கள் கடந்த சில நாட்களாக ரஜினிகாந்தை சந்திக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ‘தர்பார்’ திரைப்படம் நஷ்டம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் மிகப்பெரிய லாபத்தை அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் கொடுத்திருப்பதாகவும் ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தர்பார் படத்தை வாங்கிய உண்மையான விநியோகஸ்தர்கள் யாரும் இதுவரை இந்த படத்தின் வசூல் குறித்து வாய்திறக்கவில்லை என்றும், ரஜினி வீட்டு முன் கூடி இருப்பது விநியோகஸ்தர்களா? அல்லது அவர்களைச் சார்ந்தவர்களா? என்பது தெரியவில்லை என்றும் ரஜினி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் ‘தர்பார்’ படத்தால் உண்மையிலேயே நஷ்டமடைந்து இருந்தால் விநியோகஸ்தர்கள் தமிழக அரசை அணுகலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார் ஆனால் தமிழக அரசை விநியோகஸ்தர்கள் அணுகினால் அதற்குரிய ஆதாரங்களை கொண்டு செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தர்பார்’ படத்தை வாங்கியதற்கான ஒப்பந்தம், அந்த படத்திற்கு விற்பனை செய்த டிக்கெட், வசூல் தகவல்கள், காட்சிகளின் எண்ணிக்கை ஆகிய அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்தால் மட்டுமே அரசு இது குறித்து பரிசீலனை செய்யும் என்பதால் அரசிடம் இந்த பிரச்சனையை விநியோகிஸ்தர்கள் கொண்டு செல்வார்களா/ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்