ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2023 (21:26 IST)

'ஜென்டில்மேன் 2' திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எல். முருகன்

கடந்த 1993ல் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்  நடிப்பில் வெளியான இப்படம்  சூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தை அப்போதைய காலத்தில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்தவர்  தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

தற்போது, அவர் நீண்டகாலத்திற்கு பின் மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில்,  ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக கே.டி.குஞ்சுமோன் தெரிவித்த   நிலையில், இதற்காக  “ஜெண்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த படத்தை  கோகுல் பிரசாத்  இயக்கவுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற மரகதமணி நாயகியாக இசையமைக்கவுள்ளார். தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் சேத்தன் சீனுதான் ஹீரோவாக நடிக்க,  நயன்தாரா சக்ரவர்த்தி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக அஜயன் வின்செண்ட், கலை இயக்குனராக தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இப்படத்தின்  வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் முருகன் கூறியதாவது:
 
'தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தரர் திரு.கே.டி.குஞ்சுமோன் அவர்கள் தயாரித்துள்ள ஜென்டில்மேன் 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, படக்குழுவினர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.'
 
மேலும் 'ஆஸ்கார் விருது பெற்று நம் இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த இப்பபடத்தின் இசையமைப்பாளர்  திரு.MM.  கீரவாணி அவர்களை கௌரவித்து என் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.' என்று தெரிவித்துள்ளார்.