வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 ஜூலை 2018 (15:09 IST)

பிக்பாஸ் மிட்நைட் மசாலா: நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினசரி நடக்கும் கூத்துக்கள் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆகி வருகிறது. அதில் வரும் மிட்நைட் மசாலா என்ற பெயரில் வெளியாகும் பகுதி  ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


நேற்றைய மிட்நைட் மசாலாவில் வைஷ்ணவி பாலாஜியிடம் பேசிக்கொண்டிருந்தபோது "நீங்க இந்த டீஷர்டை துவைக்காதீங்க.. நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்.. என் காதல் இல்ல அன்பு பரிசா இதை வெச்சுக்கோங்க" என கூறுகிறார். வைஷ்ணவி எதற்காக பாலாஜிக்கு முத்தம் கொடுத்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே நேற்று முன்தினம் நடந்த மிட் நைட் மசாலாவில், பொன்னம்பலம், ஜனனி, ரித்விகா ஆகியோர் பாடல்களை பாடிக்கொண்டு இருந்தனர். அப்போது வைஷ்ணவியை பார்த்து ஜனனி, நீ ஃபுல்லா ட்ரெஸ் போட்டது பிக் பாஸுக்கே பிடிக்கலை போல' எனச் சொல்லி கிண்டலடித்தார்.