1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (09:03 IST)

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு!

பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் நீர்மட்டம் குறைய ஆரம்பித்துள்ளது.

காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திறந்துவிடப்பட்ட தண்ணீர் திருச்சி கல்லணைக்கு வந்து சேர்ந்து அங்கிருந்தும் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய ஆரம்பித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 91.40 அடியிலிருந்து 90.68அடியாக சரிந்தது. 10,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் அணைக்கு வரும் நீரின் 605 கன அடியாக உள்ளது.