1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 22 ஜூன் 2017 (16:02 IST)

மெர்சல் - இதையும் அட்லி விட்டு வைக்கவில்லையா?

விஜய் 61வது படத்தின் தலைப்பு மெர்சல் காப்பி அடிக்கப்பட்டது என்ற செய்திகள் தீயாக பரவி வருகிறது.


 

 
ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லி ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தின் கதை மௌனராகம் படத்தில் தழுவலாக இருந்தது. விஜய் நடிப்பில் வெளியான தெறி அட்லியின் இரண்டாம் படம். இதுவும் சத்ரியன் படத்தின் தழுவலாக இருந்தது. 
 
இதனால் தற்போது விஜய் நடித்துவரும் மெர்சல் திரைப்படமும் நிச்சயம் ஏதாவது ஒரு படத்தின் தழுவலாகதான் இருக்கும் என அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெர்சல் என்ற தலைப்பு குறும்படத்தின் தலைப்பு என்றும் அதிலிருந்து அட்லி சுட்டு விட்டார் என்றும் செய்திகள் தீயாக பரவி வருகிறது.
 
மெர்சல் என்ற தலைப்பில் இரண்டு, மூன்று குறும்படங்கள் உள்ளதாம். அட்லி அதைப்பார்த்துதான் தன் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு வைத்துள்ளார் என கூறி வருகின்றனர். அட்லி என்றாலே அவர் படம் வேறெதாவது படத்தின் தழுவலாகதான் இருக்கும் என்ற எண்ணம் எல்லோரிடமும் ஏற்பட்டு விட்டது. அதற்கு காரணம் அவர் எடுத்த இரண்டு படங்கள்.
 
இந்நிலையில் நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் பாலிவுட் படமான சல்மான் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் ப்ர்ஸ்ட் போஸ்டரின் காப்பி என்றும் கூறி வருகின்றனர்.