ரசிகர்களை குழப்பும் மெர்சல் தயாரிப்பாளர்: சிங்கிள் டிராக்கில் இத்தனை சிக்கலா?
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் பாடல்கள் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளதால் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அஜித்தின் 'விவேகம்' படத்தின் பாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் அதற்கு போட்டியாக மெர்சல் படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. இதுவரை விஜய் படத்திற்கு சிங்கிள் டிராக் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் நாளை மாலை 5 மணிக்கு சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பல விஜய் ரசிகர்கள் நாளை மாலை 5 மணிக்குத்தான் பாடல் வெளியாகவுள்ளதாக தவறாக புரிந்து கொண்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.