திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (19:57 IST)

ஃபேண்டசி படத்தில் நடிக்கும் மெகா ஸ்டார்...பிறந்தநாளில் புதிய அப்டேட்

chiranjeevi-157
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர், நடிப்பில், மெகர் ரமேஸ் இயக்கத்தில்  சமீபத்தில் வெளியான படம் போலா சங்கர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றது.

இன்று நடிகர் சிரஞ்சீவியின் பிறந்த நாள் என்பதால் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதன்படி, இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மெகா157 ‘ என்று பெயரிடப்பட்டுள்ள சிரஞ்சீவியின் அடுத்த படம் பேன்டசி பொழுதுபோக்கை மையமாக கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  விரைவில் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள்பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.