ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (09:47 IST)

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ்!

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் கதாநாயகியாக நடிக்க மேகா ஆகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் பிச்சைக்காரன் 2 படத்தில் அவர் நடித்து வருவதோடு இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மழை பிடிக்காத மனிதன் என்று இந்த படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பல வருடங்களுக்குப் பிறகு விஜயகாந்த் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து இப்போது படத்தின் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.