திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (13:06 IST)

மீரா மிதுனின் ஆஃபரை ஏற்றுக்கொள்வரா வைகைப்புயல்?

படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள் என வடிவேலுவிற்கு மீரா மிதுன் அழைப்பு. 

 
நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் சினிமாவில் தொடர்ச்சியாக நடிக்கவில்லை. அப்படி நடித்தாலும் அவர் படங்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடித்த இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படமும் பாதியிலேயே டிராப் ஆகியுள்ளது. 
 
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தனது சமீபத்திய வீடியோவில், வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு இருந்தார். எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். 
 
ஆனாலும் யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம். நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன். எனது படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள். பெருமைப்படுவேன் என்று கூறியுள்ளார்.