ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (12:37 IST)

கில்லி , தூள் பட நடிகர்… ஊடகவியலாளர் ரூபன் ஜெய் மரணம்!

ஊடகவியலாளரும் நடிகருமான ரூபன் ஜெய் நேற்று உயிரிழந்துள்ளார். இது அவரது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தரணி இயக்கிய தூள் படத்தில் ஜோதிகாவிடம் வம்பிழுக்கும் டி டி ஆராக நடித்தவர் ரூபன் ஜெய். அதே போல கில்லி படத்தில் கபடி நடுவராகவும் நடித்துள்ளார். ஆனால் இவரின் உண்மையான முகம் ஊடகம்தான். தமிழின் முன்னனி ஊடகங்கள் பலவற்றில் அவர் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் உடல்நலம் இல்லாமல் இருந்த அவர் நேற்று திருச்சியில் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவை சமூகவலைதளங்கள் மூலமாக அறிந்த நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.