புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (17:02 IST)

கிங்ஸ் லெவன் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு!

ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தங்கள் அணிக்கு கேப்டனாக மயங்க் அகர்வாலை நியமித்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை கடந்த சில ஆண்டுகளாக வழிநடத்திவந்த கே எல் ராகுல் இந்த ஆண்டு லக்னோ அணியால் தக்கவைக்கப்பட்டார். மேலும் அந்த அணிக்குக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். பஞ்சாப் அணிக்கு ராகுலுக்குப் பின் தலைமையேற்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் கே எல் ராகுலோடு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அணி நிர்வாகம் மயங்க் அகர்வாலுக்கு வாழ்த்து சொல்லி அறிவித்துள்ளது.