120 ரூவா டிக்கெட் 700 ரூவா.. மாஸ்டர் கொள்ளை! – ரசிகர்கள் புகார்!

Prasanth Karthick| Last Updated: செவ்வாய், 12 ஜனவரி 2021 (16:20 IST)
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஆண்டே வெளியாகவிருந்த படம் தற்போது பொங்கலை முன்னிட்டு நாளை வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை படம் வெளியாக உள்ள நிலையில் டிக்கெட் விற்பனை சில வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளில் பாதியளவு இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் டிக்கெட் விலை அதிகமாக விற்பதாக புகார் எழுந்துள்ளது. சாதாரணமாக 120 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட்டுகள் தற்போது 700 ரூபாய் வரை விற்கப்படுவதாக ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். நாளை படம் வெளியாக உள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :