வீடியோவில் சாட் செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் சூப்பர் ஐடியா

வீடியோவில் சாட் செய்து கொண்ட மாஸ்டர் டீம்
Last Modified வியாழன், 26 மார்ச் 2020 (21:09 IST)
வீடியோவில் சாட் செய்து கொண்ட மாஸ்டர் டீம்
விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் மாஸ்டர் படக்குழுவினர் ஒருவரை ஒருவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக நேரில் சந்தித்துக் கொள்ளாமல், வீடியோ சாட் மூலம் அவ்வப்போது பேசி வருகின்றனர். இதனை மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்

இதுகுறித்து மாளவிகா மோகனன் தனது டுவிட்டரில் கூறியபோது ‘மாஸ்டர் டீமில் உள்ளவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் வீடியோ சாட்டில் பேசி சமூக தனிமைப்படுத்துதலை கடைபிடித்து வருகிறோம். அதே போல் நீங்களும் கடைபிடித்து வாருங்கள் என்று கூறியுள்ளார்

அவர் இந்த வீடியோ சாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்த விபரங்களையும் தெரிவித்துள்ளார். விஜய், தயாரிப்பாளர் ஜெகதீஷ், அனிருத் ஆகியோர்கள் தன்னுடான் இந்த வீடியோ சாட்டில் கலந்து கொண்டதாக புகைப்படத்துடன் மாளவிகா தெரிவித்துள்ளார்இதில் மேலும் படிக்கவும் :