வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (11:49 IST)

ஜனவரி 16ல் விஜய், விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஷிமோகா படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் இருவரும் மோதும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இந்த படப்பிடிப்பில் படமாக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் விஜய், விஜய்சேதுபதி ஆகிய இருவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் வரும் 16ஆம் தேதி இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாக இருப்பதாக படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இந்த செகண்ட் லுக் வெளியாகும் தினமான ஜனவரி 16ஆம் தேதி விஜய்சேதுபதியின் பிறந்தநாள் என்பதும், விஜய்சேதுபதியின் பிறந்தநாள் பரிசாக ’மாஸ்டர்’ படக்குழுவினர் இந்த செகண்ட்லுக்கை வெளியிட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வரும் இந்த படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.  இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது