அடம்பிடிக்கும் விஜய்; பேரம் பேசும் தியேட்டர்கள்! – தொங்கலில் மாஸ்டர்!
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக போவதாக தகவல்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் படத்தை திரையரங்கில் வெளியிடுவதில் பிரச்சினை தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். கடந்த பிப்ரவரி இறுதியிலேயெ பட தயாரிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் படம் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கலுக்கு மாஸ்டரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகளில் பார்வையாளர்களை முழுமையாக அனுமதிக்க முடியாது என்பதால் தயாரிப்பு நிறுவனம் கேட்கும் விலையில் திரையரங்க உரிமையாளர்கள் பேரம் பேசி வருவதாக தெரிகிறது. ஓடிடிக்கு விற்கலாம் என்றாலும் திரையரங்கில் படம் வெளியாக வேண்டும் என விஜய் உறுதியாக இருப்பதால் தயாரிப்பாளர் தரப்பில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இதனால் பொங்கலுக்கு படம் திரையரங்கில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் படம் ஓடிடிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.