ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2020 (14:36 IST)

மாஸ்டர் OTT தளத்தில் வெளியீடு இல்லை - படக்குழு!

மாஸ்டர் OTT ல் வெளியாகும் என்ற தகவலை பட குழுவினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் திரைப்படங்கள் வெளியாகததால் பலர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் பலர் தங்கள் படங்களை ஓடிடி தளங்களுக்கு விற்க தொடங்கியுள்ளனர்.

விஜய் சேதுபதியின் க\பெ ரணசிங்கம், சூர்யாவின் சூரரை போற்று போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ஓடிடிக்கு விற்கப்பட்டுள்ள நிலையில் விஜய் நடித்து கிடப்பில் உள்ள “மாஸ்டர்” திரைப்படமும் ஓடிடிக்கு விற்கப்பட உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது. ஆனால், தொடர்ந்து இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்று தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தாலும், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையேயான பிரச்சினையாலும் மாஸ்டர் படத்தை OTT தளத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் வழக்கம்போல இது வெறும் வதந்தி நம்பவேண்டாம். மாஸ்டர் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என  படக்குழு தெளிவுப்படுத்தியுள்ளனர்.