வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 17 டிசம்பர் 2016 (16:59 IST)

நடிகை பாவனாக்கு திருமணம்; மாப்பிள்ளை யார் என்பது சீக்ரெட்!!

இயக்குநர் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாவனா. தொடர்ந்து தீபாவளி, கிழக்குக் கடற்கரை சாலை, வெயில், கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.

 
 
 
கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் அசல். அதற்குப் பின் வேறு எந்தத் தமிழ் படங்களிலும் அவர் நடிக்கவில்லை. பிறகு மலையாளம், கன்னடப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
 
பாவனா காதலிப்பதாக திரையுலகில் கிசுகிசுப்பட்டதை தொடர்ந்து தனது காதல் குறித்து பாவனா கூறியிருந்தார். "நானும், கன்னட தயாரிப்பாளர் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம். கடந்த 2014-ம் ஆண்டு எங்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் எங்களது திருமணம் தள்ளிப் போய்விட்டது. காலம் வரும் போது அனைவருக்கும் தெரிவிப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் தற்போது இது குறித்து வரும் தகவல்கள், பாவனாவுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடக்க உள்ளதாக அவருக்கு மிகவும் நெருக்கமான தோழிகள் உறுதி செய்துள்ளனர். பாவனா தனது காதலர் பெயரை இதுவரை தெரிவிக்கவில்லை. திருமணம் நிச்சயமாகியும் பெயரை கூறவில்லை. திருமணம் வரை அவரின் பெயரை ரகசியமாகவே வைக்க உள்ளாராம். பாவனாவின் திருமணம் பதிவுத் திருமணமாக இருக்கும் என்ற தகவலும் கசிந்துள்ளது.