செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (19:25 IST)

திருமணம் மோசடி புகார்…ஆர்யா மீது வழக்குப் பதிவு

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பண மோசடி செய்யப்பட்ட புகாரில் ஏற்கனவே இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், நடிகர் ஆர்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடிகர் ஆர்யாவைப் போல் சமூக வலைதளங்களில் பேசி, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்துள்ள இரண்டு பேரை சமீபத்தில் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் ஆர்யாவிற்குத் தொடர்பில்லை எனக் கூறி சைபர் கிரைம் போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இதற்கு எதிப்புத் தெரிவித்தத்தை அடுத்து,  தற்போது நடிகர் ஆர்யா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.