1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (20:43 IST)

'மார்க் ஆண்டனி' பட இயக்குனருக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

Mark antony
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால். இவர்  நடிப்பில்  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்   செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம்  மார்க் ஆண்டனி.  

இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று,  100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று விஷால் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, மார்க் ஆண்டனி படம் வரும்  அக்டோபர் 13ஆம் தேதி  அதாவது வரும் வெள்ளிக்கிழமை அமேசான் ப்ரைம் ஓடிடியில் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.
 
vinoth

டைம் டிராவல் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு  ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.  இந்த  படத்தில் விஷாலுடன் இணைந்து  எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தது குறிப்பிடத்தக்கது.